முகப்பு /தேனி /

தேனியின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தேனியின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

X
தேனி

தேனி மழை

கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 4 நேரத்திற்கும் மேல் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பிற்பகல் வேளையில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மாலை வேலைகளில் மிதமான மழை பெய்து வந்தது.

தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - பகுதிவாரியாக மழையின் அளவு  குறித்த விபரம் இதோ

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக தேனி மாவட்டத்தின் மலை அடிவாரப் பகுதிகளிலும், கூடலூர், கம்பம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், லோயர் கேம்ப், பெரியகுளம் மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பித்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்தது. இந்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது .

top videos

    இரவு வேளையிலும் கனமழை பல்வேறு பகுதிகளில் நீடித்து வருகிறது . மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் கடுமையாக நிலவி வந்த வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Theni