ஹோம் /தேனி /

தேனி மாணவன் வட அயர்லாந்து கடலில் 15 டிகிரி குளிரில் 35 கி.மீ  நீந்தி சாதனை

தேனி மாணவன் வட அயர்லாந்து கடலில் 15 டிகிரி குளிரில் 35 கி.மீ  நீந்தி சாதனை

தேனி

தேனி

Theni Student Swims 35 km In 15 Degree Cold Sea In Northern Ireland | தேனியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர்  வட அயலர்ந்து கடலில் 15 டிகிரி குளிரில் நீந்தி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இந்த மாணவன் இந்தியாவில் பார்க் ஜல சந்தையிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.  

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் வட அயர்லாந்து கடலில் 15 டிகிரி குளிரில் நீந்தி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இந்த மாணவன் இந்தியாவில் பாக் ஜலசந்தியிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

தேனி பழைய அரசு ஆஸ்பத்திரி ரோடு பகுதியைச் சேர்ந்த நீதிராஜன் - அனுஷா தம்பதியின் மகன் சினேகன் (14). தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதையும் படிங்க ; தேனி : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய எஸ்.ஆர்.எஸ் அறக்கட்டளை

இவர் 2 முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக் ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். தற்போது வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கி.மீ தூரத்தை பிரீஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவு செய்தார்.

இதற்காக கடந்த 2ம் தேதி வடக்கு அயர்லாந்து சென்ற சினேகன் 12 முதல் 15 டிகிரி வரை குளிர்ந்த நீரில் கடல்நாய்கள், சிறிய ரக சுறா மீன்கள் நிறைந்த கடலில் 10 நாட்கள் பயிற்சியாளர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படி பயிற்சி பெற்றார்.

அதன்பின் அந்நாட்டு நீச்சல் பயிற்சியாளர்களுடன் பாதுகாப்பாக கடலில் நீந்தினார். அந்நாட்டின் நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை வட அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரை 35 கி.மீ தூரம் கடந்து சாதனை படைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இதுவரை யாரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாணவர் சினேகனின் சாதனை பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாணவனுக்கு தேனியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni