ஹோம் /தேனி /

தேனியில் ஆயுஸ், சித்தா மருத்துவம் குறித்து புள்ளி விவர சேகரிப்பு - காரணம் என்ன?

தேனியில் ஆயுஸ், சித்தா மருத்துவம் குறித்து புள்ளி விவர சேகரிப்பு - காரணம் என்ன?

அதிகாரிகள்

அதிகாரிகள் புள்ளி விவர சேகரிப்பு

Theni | தேனி மாவட்டத்தில் ஆயுஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவ முறைகள் குறித்து மத்திய அரசு சார்பில் புள்ளி விவர கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பிளாக்குகளில் மத்திய மாநில அரசின் திட்டங்கள் பொதுமக்களிடையே சென்று சேர்ந்துள்ளதா என்ற விவரங்களை கணக்கெடுப்பதற்காக தேசிய மாதிரி ஆய்வு 79வது சுற்று கணக்கெடுப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கணக்கெடுப்பு

தேசிய மாதிரி ஆய்வுக்கான 79-வது சுற்று புள்ளிவிவர சேகரிப்பு புள்ளியியல் துறையினர் சார்பாக தேனி மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் முழுவதும் 8 நகர்ப்புற பகுதிகள் 8 கிராமப்புற பகுதிகள் என மொத்தம் 16 பிரிவுகளாக (பிளாக்) பிரிக்கப்பட்டு புள்ளி விவர சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட வீடுகளில் குறிப்பிட்ட 32 வீடுகளை தேர்வு செய்து அதில் 20 வீடுகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை விவரங்கள் குறித்த (camps ) புள்ளி விவரங்களையும் , 12 வீடுகளில் ஆயூஸ்( Aayush ) பற்றிய புள்ளி விவரங்களையும் தேனி மாவட்ட புள்ளியியல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.

புள்ளி விவர சேகரிப்பில் அதிகாரிகள்

தேனி மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மாவட்ட துணை இயக்குனர் மயில்சாமி தலைமையிலான குழுவினர் மாவட்டத்தில் உள்ள 16 பிளாக்களிலும் கேம்ஸ், ஆயுஸ் என்ற இரண்டு வகையான புள்ளி விவரங்களை சேகரிக்கின்றனர்.

புள்ளி விவர சேகரிப்பு

அதாவது பொதுமக்களின் அடிப்படை விவரங்கள், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, கல்வி, பொழுதுபோக்கு , வேலைவாய்ப்பு , போக்குவரத்து இடப்பெயர்வு, மருத்துவ பயன்பாடு, மருத்துவ செலவுகள், இதரச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை விவரங்களும், ஆயூஸ் பற்றிய புரிதல் பொதுமக்களிடையே உள்ளதா என்றும் பொதுமக்கள் ஆயுர்வேதம், சித்தா, யோகா உள்ளிட்ட இயற்கை சார்ந்த மருத்துவத்தை பின்பற்றுகின்றனரா அதனைப் பற்றிய புரிதல் பொதுமக்களிடையே இருக்கின்றதா என்பதை பற்றிய பல்வேறு தகவல்களை புள்ளியியல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.

புள்ளி விவர சேகரிப்பில் அதிகாரிகள்

இந்தப் புள்ளி விவர சேகரிப்பில் தேனி மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் துணை இயக்குனர் மயில்சாமி தலைமையில் கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர்கள் துரை, ஜான்சிராணி, வட்டார புள்ளிஇயல் ஆய்வாளர்கள் திருப்பதிராஜா, கலையரசன், சுப்பிரமணியன், தளபதி, மாணிக்கம் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சூரஜ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

புள்ளி விவர சேகரிப்பு

புள்ளியியல் துறையினர் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை அரசிடம் வழங்கும்பொழுது பொதுமக்களின் வளர்ச்சிக்கு தேவையான தகவல்களை அரசு பெற்று கொண்டு அரசின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வளர்ச்சிக்கு இந்த கணக்கெடுப்பு உதவும் என்று புள்ளியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் வளர்ச்சிக்கு உதவும்-

இதுகுறித்து புள்ளியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ’தேசிய மாதிரி ஆய்வுக்கான 79-வது சுற்று புள்ளிவிவர சேகரிப்பு தற்போது தேனி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசின் மருத்துவத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு உள்ளதா தங்களுடைய அன்றாட செலவுகளை எவ்வாறு செய்கின்றனர்.. தற்போதைய தேவை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்களிடமிருந்து பெற்று அரசுக்கு வழங்கும் முயற்சியே இந்த கணக்கெடுப்பு. இது நீடித்த நிலையான வளர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்த பெரிதும் அரசுக்கு உதவி அளிக்கும்.

ஆயூஸ் கணக்கெடுப்பின் போது கடந்த 135 நாட்களாக பொதுமக்கள் ஆயூஸ் முறையில் சிகிச்சை பெற்றுள்ளனரா? சிகிச்சை பெற்றதற்கான செலவுகள் என்ன? கர்ப்பிணி பெண்கள் ஆயூஸ் முறையில் சிகிச்சை பெறுகின்றனரா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின் இறுதி விவரங்களை தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிடும்’ என்று தெரிவித்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni