Home /theni /

தேனி : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய எஸ்.ஆர்.எஸ் அறக்கட்டளை

தேனி : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய எஸ்.ஆர்.எஸ் அறக்கட்டளை

மாணவிக்கு

மாணவிக்கு பரிசு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு SRS கல்வி அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு SRS கல்வி அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

உதவித்தொகை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் வசிக்கும் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த பள்ளி படிப்பை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு SRS கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2011 ஆண்டு தொடங்கப்பட்ட எஸ் ஆர் எஸ் கல்வி அறக்கட்டளை, பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி சார்ந்த உதவிகளை செய்து வருகிறது.

மாணவருக்கு வழங்கப்பட்ட பரிசு


தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், ஆங்கில அகராதி, எழுதுகோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி வந்த நிலையில், புதுப்பட்டி பகுதியில் கல்வி இடைநிற்றலை மாணவ, மாணவிகள் தவிப்பதற்காக உதவி தொகை வழங்கும் நிகழ்வை இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளனர்.

பள்ளிச் சிறுமிக்கு வழங்கப்பட்ட பரிசு


புதுப்பட்டி பகுதியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 500, 9 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 750 ம் , 11 ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் ஆயிரமும், கல்லூரி படிப்பை மேற்கொள்வோர்களுக்கு 2,000 ரூபாயும் என சுமார் 80 மாணவ, மாணவிகளுக்கு வழங்கி உள்ளனர்.

மாணவருக்கு வழங்கப்பட்ட பரிசு


உதவித்தொகை சிறிய அளவில் இருந்தாலும் இதனை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் கல்விக்காக செலவு செய்வர் என்பதற்காக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்தியதாக எஸ் ஆர் எஸ் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி