ஹோம் /தேனி /

தேனி : அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தேனி : அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

X
அனுமனுக்கு

அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்

Theni District News : தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள 100 ஆண்டுகள் பழமையான அனுமந்தராயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளை கண்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஸ்ரீசனிபந்தன ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி திருநாளை முன்னிட்டு 7வது ஆண்டாக பால்குடம் எடுத்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

சுயமாக தோன்றிய அனுமந்தராயர் கோயிலுக்கு வருபவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், காரியசித்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிவர்த்தி பெறுவதாக கூறப்படுவதால் கோயிலின் புகழ் தேனி மாவட்டத்தை கடந்து வெளி மாவட்டங்களுக்கும் பரவியதால் இக்கோயிலுக்கு அதிகப்படியான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகை தருகின்றனர்.

கோயிலில் அனைத்து சனிக்கிழமை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் காணப்படும் நிலையில்

சிறப்பு வாய்ந்த அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயருக்கு உகுந்த சிறப்பு நாட்களில் நடைபெறும் அபிஷேகங்கள், நெய்யபிஷேகம், அனுமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படுவதை காண ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் - ஒருவழிப் பாதை விவரங்கள்

 அந்த வகையில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி டிசம்பர் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் கடந்த ஒரு வாரம் காலம் கோயிலில் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனுமந்தருக்கு துளசி மாலை அணிந்தும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த வகையில் தற்போது அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கணபதி பூஜை, கலசபூஜை, யாகசாலைபூஜை, செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பவித்தார் சுயம்பு அனுமந்தராயர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இக்கோயிலில் வழிபாடு நடத்தினால் காரியத்தடை உடனடியாக விலகும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர் : சுதர்சன் - தேனி 

First published:

Tags: Local News, Theni