ஹோம் /தேனி /

தேனி | பெங்களூருவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொலைநோக்கி மூலம் வான்வெளி அதிசயங்களை ரசித்த மாணவர்கள்

தேனி | பெங்களூருவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொலைநோக்கி மூலம் வான்வெளி அதிசயங்களை ரசித்த மாணவர்கள்

X
தேனி

தேனி ஸ்கை அப்சர்வேஷன் டே

Theni | தேனி தனியார் பள்ளியில் விலையுயர்ந்த தொலைநோக்கி மூலம் மாணவர்களுக்கு வான்வெளியை அதிசங்கள் குறித்து காட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்கை அப்சர்வேசன் டே என்ற வான்வெளி கல்வியை ஊக்குவிக்கும் விதமான நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரத்யேக விண்வெளி தொலை நோக்கியை ஐந்து லட்சம் ரூபாய் செலவில் பெங்களூரில் இருந்து வரவழைத்து பரந்த வான்வெளி அதிசயங்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கணடுகளித்தனர்.

ஸ்கை அப்சர்வேஷன் டே

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஜெய் கிரிஸ் வித்யா ஆசிரமம் சிபிஎஸ்சி பள்ளியில் ஸ்கை அப்சர்வேஷன் டே என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விண்வெளி குறித்த விளக்கத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தனியாக ஒருஅறையில் விண்வெளி அமைப்பு , சூரியகுடும்பம் , கோள்கள் குறித்து, தத்ரூபமாக வடிவமைப்பு செய்யப்பட்டு இருந்தது.

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சூரியகதிர் காப்பு கண்ணாடிகள் மூலம் வான்வெளியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கூட்டம் கூட்டமாக முதன்முறையாக தொலைவிலுள்ள வான்வெளியை அருகில் இருந்து பார்ப்பதுபோல் பார்த்து ரசித்தனர்.

அதன்பின்பு தனியாக அமைக்கப்பட்டிருந்த அறையில் 12 ராசிகள் குறித்தும் அவற்றின் பெயர் விளக்கங்கள் குறித்தும் சக்கர அமைப்பில் தரையில் செயல்முறையாக வைக்கப்பட்டிருந்தது. அதன்அருகில் செவ்வாய் கிரகத்தின் அமைப்பு மற்றும் சமீபத்தில் அமெரிக்க நாசா நிறுவனம் கண்டுபிடித்த செவ்வாயில் நீர் இருப்பது போன்ற தோற்றமும் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சூரியக் குடும்பம், சூரியனை சுற்றிவரும் கோள்கள் அமைப்பும் ஒரு மரத்தின் கிளைகள் போன்ற அமைப்பில் பார்த்தவுடன் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த காலங்களில் விண்வெளிக்கு சென்ற நமது இந்திய வீரர்கள் கமலாசோனி, கல்பனா சாவ்லா, ஓமிஜஹாங்கீர் பாவா உள்ளிட்ட பல விண்வெளி வீரர்களின் படங்களும் அவர்களது ஆய்வு குறித்தும் விளக்கங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அடுத்து வசிஸ்டர், அகத்தியர், கௌதமர், விசுவாமித்திரர் உள்ளிட்ட 7 சப்த ரிஷிகளின் படங்களும் வைக்கப்பட்டும், நபுலா எனப்படும் வாயுமண்டலம் , சூரியமண்டலம் எரிகற்கள் , நிலா, துணைகோள்கள் ஆகியவை குறித்தும் அதற்கான அமைப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

தேனியில் அம்மன் பாடலுக்கு 500 மாணவிகள் ஒன்றாக பரதநாட்டியம் ஆடி உலக சாதனை

இந்த அமைப்புகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒவ்வொன்றாக கூறி விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பள்ளி மைதானத்தில் பெங்களூரில் இருந்து பிரத்தியேகமாக 5 லட்ச ரூபாய் செலவில் வரவழைக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கி மூலம் இரவில் தெரியும் நிலா, நட்சத்திரங்கள், துணைகோள்கள், வான்வெளி உள்ளிட்டவைகளை மாணவர்களும் பெற்றோர்களும் வெறும் கண்களால் துல்லியமாகவும் உற்சாகமாகவும் கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியானது பள்ளி மாணவ மாணவிகளுக்கு வான்வெளி கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni