ஹோம் /தேனி /

தேனியில்செல்வமகள் சேமிப்பு திட்டத் திருவிழா - பெண் குழந்தைப் பெற்றவர்கள் தெரிஞ்சுக்கோங்க

தேனியில்செல்வமகள் சேமிப்பு திட்டத் திருவிழா - பெண் குழந்தைப் பெற்றவர்கள் தெரிஞ்சுக்கோங்க

செல்வமகள்

செல்வமகள் திட்டத் திருவிழா

Theni | தேனி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட திருவிழா நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 11-ம் தேதி வரை செல்வமகள் சேமிப்பு திட்டம் திருவிழா நடைபெற்றுவருகிறது. எனவே, இந்தத் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள தபால் நிலைய அதிகாரி விளக்குகிறார்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்

பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை காக்கும் பொருட்டு 'சுகன்யா சம்ரிதி' எனும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பொதுமக்கள் புதிய கணக்கை தொடங்குவதற்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள 221 தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிய கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது.

அஞ்சல் அலுவலகம்

தேனி மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத் திருவிழா நடைபெற்று வருவதால் நடப்பாண்டில் 21,000 புதிய கணக்குகள் துவங்க தபால் துறை திட்டமிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கான விதிமுறைகள் என்ன அத்திட்டத்தின் பயன் என்ன என்பது பற்றிய முழு விவரத்தை தற்போது காணலாம்.

செல்வமகள் திட்டத்தில் சேர்ந்த பெண்

தகுதி

பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை காக்கும் பொருட்டு குழந்தை பிறந்ததிலிருந்து பணத்தை சேமிப்பதற்கான சிறு சேமிப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேருவதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அதாவது பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம்.

செல்வமகள் திட்டப் பயனாளி

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் வெவ்வேறு கணக்கு தொடங்கலாம். குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே திட்டத்தில் கணக்குத் துவங்க அனுமதி உண்டு. அதாவது பெற்றோர்கள் இரண்டு வெவ்வேறு பெண் குழந்தைகளின் பெயரில் இரண்டு கணக்குகளை மட்டுமே திறக்க முடியும்.

முதலீடு

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கினால் குறைந்தபட்சமாக 250 முதல் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம். ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை செலுத்தலாம். வருடத்தில் ஓரிரு மாதங்கள் பணத்தை செலுத்த தவறினாலும் அடுத்தடுத்த மாதங்களில் பணத்தை செலுத்தி கொள்ளலாம். ஒரு வருடத்தில் எவ்வளவு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதை அவர்கள் பெற்றோர்களை முடிவு செய்யலாம். ஆனால் வருடத்திற்கு குறைந்தபட்சம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கிய பெற்றோர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கணக்கு விடுபட்டிருந்தால் அபராதமாக 50 ரூபாய் கட்டி மீண்டும் கணக்கை புதுப்பித்து கொள்ளலாம்.

காசோலை, வரையோலை மூலமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வசதியும் உள்ளதாக தபால் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கும், 7.6 சதவீத வட்டியும் அளிக்கப்படுகிறது.

திட்டத்தில் புதிதாக கணக்கு துவங்குவதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் கார்டு, பான் கார்டு, அடையாளம் மற்றும் குடியிருப்பு ஆதாரம் தொடர்பான பிற ஆவணங்கள் புதிய கணக்கு தொடங்கும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் .

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7.6 சதவீத வட்டி கிடைப்பதால் பொதுமக்கள் இந்தத் திட்டத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம். மேலும் இந்த இடத்தில் பல்வேறு நன்மைகளை அருகில் உள்ள தபால் நிலைய அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni