தேனியில் வீரபாண்டி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல தேனி மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா இந்த ஆண்டு மே மாதம் 9ஆம் தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகப் புகழ்பெற்ற வீரபாண்டி சித்திரை திருவிழா 8 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலுக்கு திருவிழாக்காலங்களில் தினசரி 50,000ற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வர். இதனால் போக்குவரத்துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதும் வழக்கம். பெரியம்மை, சின்னம்மை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டி பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேசமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபட்டு, சித்திரைத் திருவிழா நடத்துவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
திருவிழா நடைபெற கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது முதல் நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே காணப்பட்டது.
இதனையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் என்பதால் , இக்கோயிலுக்கு கூடுதலான போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் திருவிழா சமயங்களில் தினந்தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு மேல் வந்து செல்வார்கள் என்றும் உளவுத் துறை சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்களுக்காகவும் உள் மாவட்ட மக்களுக்காகவும் சிறப்பு பேருந்து வசதி அரசு போக்குவரத்து துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க | தேனியில் வெளுத்து வாங்கும் மழை; உயர்ந்தது அணை நீர்மட்டம்.. எவ்வளவு தெரியுமா?
மாற்றுப்பாதை :-
திருவிழா நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தேனியிலிருந்து குமுளி செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தேனி - போடி விளக்கு - போட்டேந்திபுரம்- உப்புக்கோட்டை - கூலையனுர் - பாலர் பட்டி - குச்சனூர் - மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் (அ) உத்தமபாளையம் சென்றடையவும், அதே போன்று குமுளியிலிருந்து தேனி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் உப்பார்பட்டி விலக்கு முன்பு திருப்பப்பட்டு மாற்று வழியாக தப்புக்குண்டு, தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் வழியாக தேனி சென்றடையவும் காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறும் தேனி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Traffic