ஹோம் /தேனி /

தேனி அல்லிநகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. 

தேனி அல்லிநகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. 

தேனியில்

தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Theni Disitrict News : தேனி மாவட்டம் எடமால் தெருவில் சாலையை ஆக்கிரமித்து தொழில் செய்து வந்த வணிகக் கடைகளில் ஆக்கிரமிப்புகளை - தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தேனி மாவட்டம் தேனி நகரில் வணிக கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வளர்ந்த வணிக நகரமாக தேனி நகர் உருவாகியுள்ள நிலையில் பல்வேறு தேவைகளுக்காக தேனி மாவட்ட மக்கள் தேனி நகருக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

தேனி நகரில் முக்கிய வணிக பகுதியான எடமால் தெருவில் அனைத்து விதமான கடைகளும் உள்ளதால் பொதுமக்களின் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படும் . இந்தப் பகுதியில் கடைகள் வைத்திருக்கும் சில உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து தொழில் செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதிகளில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த இட நெருக்கடியில் சிக்குவதாகவும் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறையாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ALSO READ : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்.....

இந்நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட எடமால் தெருவில் ஆக்கிரமிப்பு அதிகமானதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதாக தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினர் இன்று எடமால் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சாலையை ஆக்கிரமித்து இருந்த பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது . நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni