முகப்பு /தேனி /

Theni News : பேபி அணையில் 15 மரங்களை வெட்டினால், 15 ஆயிரம் மரங்களை நட தயார் - பெரியாறு வைகை பாசன சங்க பொதுச்செயலாளர்

Theni News : பேபி அணையில் 15 மரங்களை வெட்டினால், 15 ஆயிரம் மரங்களை நட தயார் - பெரியாறு வைகை பாசன சங்க பொதுச்செயலாளர்

X
முல்லைபெரியாறு

முல்லைபெரியாறு அணை

Theni District News : முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு நடத்தி அணை பலமாக உள்ளது என்று தெரிவித்த நிலையில், மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்துவதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டுமென பெரியாறு வைகை பாசன சங்க பொதுச் செயலாளர் பொன் காட்சி கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கவும் பராமரிக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையில் மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. பின்னர் இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.  இந்தக் கண்காணிப்பு குழுவினர் பருவ மழை காலங்களில் அணை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வர்.அதன்படி தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 136 அடியை நெருங்குகிறது.

அணை பலமாக உள்ளது:

இந்நிலையில் மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் சில நாட்கள் முன்னர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பில் பெரியார் கோட்ட சிறப்பு செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரளாவின் சார்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிகுமார் மற்றும் உதவி பொறியாளர் பிரஷீத் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

முல்லைபெரியாறு அணை

பிரதான அணை, பேபி அணை, நீர்வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் மற்றும் ஷட்டர் இயக்கங்கள், கேலரி பகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும், அணையில் உள்ள 13 மதகுகளில் 2,5,9 என் கொண்ட மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். அணையின் நீர்மட்டம் 135.90 கன அடியாக இருக்கும் பொழுது அணையின் சீப்பேஜ் வாட்டர் (கசிவு நீர் ) நிமிடத்திற்கு 115.08 மில்லி மீட்டராக இருந்தது. அணையின் நீர் மட்டத்திற்கு ஏற்ப அணையின் கசிவு நீர் இருப்பதால் அணை பலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய துணை கண்காணிப்பு குழு

மத்திய துணை கண்காணிப்பு குழு, முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை தெரிவிக்க அவசியமில்லை, அணை எப்பொழுதும் உறுதியாக இருக்கிறது, மத்திய கண்காணிப்பு குழு மற்றும் மத்திய துணை கண்காணிப்பு குழு அணையை சோதனை செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை அளிக்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியாக நடைமுறைப் படுத்தப் படுகிறதா என்பதை கண்காணித்து அதனை செயல்படுத்த அனைத்து வழிகளையும் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் தேனி மாவட்ட விவசாய சங்கத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா?

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளரான பொன் காட்சி கண்ணன் கூறுகையில், " முல்லை பெரியாறு அணை எப்பொழுதும் உறுதித் தன்மை கொண்டது. மழைக் காலங்களிலும் பருவமழைக் காலங்களிலும் அணையை பல முறை ஆய்வு செய்தாலும் இதே நிலைதான். மத்திய கண்காணிப்பு குழு மற்றும் மத்திய துணை கண்காணிப்பு குழு அணையை ஆய்வு செய்து அணை உறுதியாக இருக்கிறது என்று தெரிவிப்பதை விட, அணைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செய்வதை உறுதி செய்யவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். ரூல்கர்வ் முறையில் உள்ள சிக்கல்கள் குறித்தும், தளவாட பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல கேரள அரசு கெடுபிடி காட்டி வரும் நிலையில், மத்திய துணை கண்காணிப்புக் குழுவிடம் கண்டனம் தெரிவித்த பெரியார் கோட்ட சிறப்பு செயற்பொறியாளர் சாம் இர்வின் அவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

முல்லைபெரியாறு அணை

மேலும் பேபி அணையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை உயர்த்துவதற்கான வழி என்ன என்பதை துணை கண்காணிப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்டுவதில் எங்களுக்கும் உடன்பாடில்லை. ஆனால் அணையில் தண்ணீரை தேக்குவதற்கு பேபி அணையை பலப்படுத்த வேண்டியுள்ளது. 15 மரங்களை அப்புறப்படுத்தினால் 15 ஆயிரம் மரங்களை நடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மத்திய துணை கண்காணிப்புக் குழு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை " என்றார்

First published:

Tags: Local News, Mullai Periyar Dam, Theni