ஹோம் /தேனி /

தேனி : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்.. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசிடம் கோரிக்கை..!

தேனி : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்.. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசிடம் கோரிக்கை..!

X
தேனி

தேனி

Jacto Geo Protest : தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று மாநில அளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மற்றும் ஊர்ப்புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து விட்டு அதனை மறந்து விட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி கவலை இல்லாமல் உள்ள திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

First published:

Tags: Local News, Theni