ஹோம் /தேனி /

தேனி : கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தேனி : கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

X
விசைத்

விசைத் தறி

Theni power loom workers protest | தேனியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் துவங்க வலியுறுத்தி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி - சுப்புலாபுரம் கிராமத்தில் விசைத்தறி கூடங்கள் மூலம் பல்வேறு காட்டன் ரக சேலைகள் மற்றும் பேன்சி ரக சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட விசைத்தறி கூட உரிமையாளர்கள் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டு இறுதியுடன் நிறைவடைந்துள்ளது.

ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் தற்போது வரை துவங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதால் உடனடியாக புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திட வேண்டி விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த நூல்கண்டு தயாரிப்பது பாகு தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி - முதல் பரிசை வென்ற போடி கூடைப்பந்தாட்ட அணி

இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்த சங்கத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திடீர் வேலை நிறுத்தம் காரணமாக உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் உரிமையாளர்களுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தொழிலாளர்கள் கூறினர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni