ஹோம் /தேனி /

Theni Power Cut : தேனியில் நாளை (ஜனவரி 28) முக்கிய பகுதிகளில் மின்தடை

Theni Power Cut : தேனியில் நாளை (ஜனவரி 28) முக்கிய பகுதிகளில் மின்தடை

மாதிரி படம்

மாதிரி படம்

Theni Power Cut | கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தேனி மாவட்டம் கண்டமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 28.01.2022) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடைபடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  மின்தடை :-

  தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக,

  அம்பாசமுத்திரம், கண்டமனூர், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம் சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தார்பட்டி கணேசபுரம்,

  ஜி. ராமலிங்கபுரம், சித்தார்பட்டி கணேசபுரம், ராமலிங்கபுரம், காமராஜபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இதனால், கண்டமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: சுதர்ஸன்

  Published by:Vijay R
  First published:

  Tags: Power cut, Theni