தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு என்றும் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 40 வாகனங்கள் தேனி மாவட்ட காவல்துறையினரால் ஜூலை 14ம் தேதி காலை 11:00 மணிக்கு ஆயுதபடை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்கள் ஏலம்:
காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு பராமரிப்பு செய்ய இயலாமல் இருக்கும் வாகனங்கள், காவல்துறையினரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை யாரும் உரிமை கோராமல் பல நாட்களாக காவல் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு இருந்தால் அது அரசுடமையாக்கப்பட்டு பொது ஏலம் விடப்படுவது வழக்கம்.

ஏலம் விடப்படும் இருசக்கர வாகனங்கள்
அதன்படி தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, மற்றும் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த 40 வாகனங்கள் ஜூலை 14ம் தேதி காலை 11:00 மணிக்கு தேனி மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் ஏலம் நடக்க உள்ளது.

ஏலம் விடப்படும் இருசக்கர வாகனங்கள்
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 34 டூவீலர்கள், 2 ஆட்டோக்கள், 4 கார்கள் என 40 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் பொது மக்கள் பார்வைக்காக தேனி, உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏலம் விடப்படும் இருசக்கர வாகனங்கள்
ஏலதாரர்கள் ஜூலை மாதம் 8 ஆம் முதல் 13 ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்பவர்கள் தலா ஒரு இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம், தலா ஒரு ஆட்டோவிற்கு ரூ.8 ஆயிரம், காருக்கு ரூ.10 ஆயிரம் முன்பணமாக ஜூலை 13 மதியம் 2:00 மணிக்குள் தேனி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகை, ஜி.எஸ்.டி தொகை முழுவதும் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு தேனி 04546 - 250 024, உத்தமபாளையம் 04545 - 266230 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.