ஹோம் /தேனி /

இளையராஜாவுடன் இணைந்த தேனி கவிஞர்... வைரமுத்து அல்ல - இவர் யார் தெரியுமா?

இளையராஜாவுடன் இணைந்த தேனி கவிஞர்... வைரமுத்து அல்ல - இவர் யார் தெரியுமா?

இளையராஜா

இளையராஜா

Theni District | இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து தனது பாடல் வரிகளில் மக்களை கவர்ந்தவர் தேனியைச் சேர்ந்த முக்கிய கவிஞர். இவரின் திரைப்பாடல்கள் தினந்தோறும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவர் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவும், கவிஞர் வைரமுத்துவும் இணைந்து பல அற்புதமான பாடல்களை கொடுத்தனர். அந்த பாடல்கள் மக்களின் காதுகளிலும் மனங்களில் நாள்தோறும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

இதேபோல, இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து தனது பாடல் வரிகளில் மக்களை கவர்ந்தவர் தேனியைச் சேர்ந்த மற்றொரு கவிஞர். இவர் 1980களில் தொடங்கி திரைப்பாடல்களை எழுதி மக்கள் இதயங்களில் இருந்து நீங்காத பாடல் வரிகளை வழங்கியவர்.

இவருடைய மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள், திரைப்பட பாடல் வரிகளும் மக்களின் மனம் கவர்ந்தவை ஆகும். உவமை, உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் வெளிப்பாடு என மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர் தான் கவிஞர் மு.மேத்தா.

கவிஞர் மு.மேத்தா

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில், கவிஞர் முகமது மேத்தா 1945 செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தார். இவர் தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயது முதல் கவிதை கட்டுரைகளை எளியமையாக பிறருக்கு புரியும் வகையில், படைப்பதில் வல்லவர். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பேராசியராக இருந்து கொண்டே புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், சிறுதை, நாவல், கட்டுரை, திரைப்பட பாடல்களையும் எழுதினார். 1981 ஆண்டு வெளியான அனிச்சமலர் படத்திற்கு, சங்கர் கணேஷ் இசையில் இவருடைய முதல் திரைப்பட பாடல் வெளியானது.

இளையராஜா-மு.மேத்தா

அதன் பிறகு, இளையராஜவுடன் இணைந்த மேத்தா ஏராளமான பாடல்களை எழுதி, நம் காதுகளுக்கும் மன உணர்வுகளுக்கும் உற்சாகமளித்து சிந்தனையைத் தூண்டியவர்.

மு.மேத்தாவின் பாடல்வரிகள் இடம் பெற்ற திரைப்படங்கள் ஆண்டு வாரியாக:

1981 பன்னீர் புஷ்பங்கள்

1982 ஆகாய கங்கை

1985 நான் சிகப்பு மனிதன்

1985 இதய கோவில்

1985 உதயகீதம்

1985 உன்னை விடமாட்டேன்

1985 உன் கண்ணில் நீர் வழிந்தால்

1986 மரகத வீணை

1987 ரெட்டை வால் குருவி

1987 வேலைக்காரன்

1987 கிருஷ்ணன் வந்தான்

1987 சிறைப்பறவை

1987 மைக்கேல் ராஜ்

1988 கலியுகம்

1988 சொல்ல துடிக்குது மனசு

1988 தாய்ப்பாசம்

1989 அன்னக்கிளி சொன்ன கதை

1989 ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான்

1990 கேளடி கண்மணி

1991 இதயவாசல்

1991 தந்துவிட்டேன் ௭ன்னை

1992 உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

1994 பிரியங்கா

1996 பூமணி

1998 கும்பகோணம் கோபாலு

1999 ராஜஸ்தான்

1999 தொடரும்

1999 நிலவே முகம் காட்டு

2000 பாரதி

2000 இளையவன்

2001 காசி

2002 இவன்

2002 ௭ன் மனவானில்

2003 பிதாமகன்

2005 கரகாட்டக்காரி

2005 சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

2009 அழகர் மலை

2010 நந்தலாலா

2011 அய்யன்

2012 அஜந்தா

கவிஞர் வாலியுடன் மு.மேத்தா

மு.மேத்தா அவர்கள் பரவராஜ், சிற்பி, சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பளாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாடெமி விருது கிடைத்தது. மேலும் சிறுதைகளும், மரபு கவிதைகள், நாவலுக்கும் விருதுகளை வென்றுள்ளார். படைப்பாற்றலில் மட்டும் அல்லாது, பிறருடன் பழகுவிதிலும் இனியவர் மு.மேத்தா. மற்ற கவிஞர்களுடன் அன்பாக பழகும் இயல்பை கொண்டவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இளையராஜாவின் இசையில் தேனருவியில் நனைந்திடும் மலரோ, பெண் மானே சங்கீதம், பாடு நிலாவே, ராஜராஜ சோழன் நான், ஒரு பூவனக்குயில் மாமரத்துல, யார் வீட்டில் ரோஜா, தோட்டத்துல பாத்திகட்டி, கற்பூர பொம்மையொன்று, ௭ம்பாட்டு ௭ம்பாட்டு, ௭ன் மனவானில் சிறகை உள்ளிட்ட பாடல்கள் இன்றும் பட்டையை கிளப்பி வருகின்றன.

Must Read : கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்பட லிஸ்ட்!

இவரது முதற் கவிதைத்தொகுப்பான ‘கண்ணீர்ப் பூக்கள்’ அதிக எண்ணிக்கையில் விற்பனையனி புத்தகம் ஆகும். இது இளைஞர்களால் அதிகமாக படிக்கப்பட்டது. இதேபோல, ஊர்வலம், மனச்சிறகு, அவர்கள் வருகிறார்கள், முகத்துக்கு முகம், நடந்த நாடகங்கள், காத்திருந்த காற்று, ஒரு வானம் இரு சிறகு, திருவிழாவில் தெருப்பாடகன் உள்ளிட்ட கவிதை நூல்களும் அதிகம் பேச்சப்பட்டவையாகும்.

First published:

Tags: Ilayaraja, Local News, Theni