ஹோம் /தேனி /

தேனி பெத்தாச்சி விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..

தேனி பெத்தாச்சி விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு..

X
தேனி

தேனி

Theni New Year Celebrations | ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தாட்சி விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தேனி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீபெத்தாட்சி விநாயகர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 2022ம் ஆண்டு முடிவு பெற்று 2023ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் அருகாமையில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவர்.

அந்த வகையில் தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபெத்தாட்சி விநாயகர் கோவிலில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜையில் தேனி அல்லிநகரம், பொம்மையை கவுண்டன்பட்டி, அண்ணன்ஜி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு பெத்தாச்சி விநாயகர் பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகங்கள் முடிந்த பின் ஸ்ரீபெத்தாட்சி விநாயகர் பெருமாள் சிறப்பு அலங்காரமான சந்தன காப்பில் எழுந்தருதி வெற்றிலை பூக்கள் மற்றும் ஒரு ரூபாய் தாள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : கோவை வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ரத்து.. வழித்தடத்தில் மாற்றம்  - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பின்னர் பெத்தாச்சி விநாயகர் பெருமாளுக்கு சிறப்பு தீபாரணை காமிக்கப்பட்டது. புத்தாண்டு நாளில் பெத்தாட்சி விநாயகர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தோன்றி ஏளமான பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சக்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni