தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சம்பட்டி அருகாமையில் சுக்குவாடன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மயானம் தேனி - பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
இந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளாக மயானம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்ணையா தேவர் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்தார். அந்த நிலத்தில் ஊஞ்சம்பட்டி ஊராட்சி சார்பில், தாய் திட்டத்தில் கீழ் 2011, - 2012 நிதியாண்டில் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு எரிவூட்டும் கொட்டகை மற்றும் தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயானத்தை அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த கொரோனா தொற்று காலத்தில் இறந்தவரின் உடலை பொம்மையை கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எரித்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது பொம்மையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நகராட்சி சார்பாக மயானம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த நிலையில் பொம்மையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் சுக்குவாடன்பட்டி கிராமத்தில் இருக்கும் மாயனத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று சமூக வலைதளங்களிலும் சுவரொட்டிகளும் ஒட்டி ஊருக்கு கெட்ட பேர் ஏற்படுத்தும் வகையிலும் பிரச்னை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மயானத்திற்கு படையெடுத்த பெண்கள்..
இந்த நிலையில் சுக்குவாரம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரனிடம் மயான பிரச்னை குறித்து மனு அளித்தனர். பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் திரண்டு தேனி - பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனத்திற்கு பேரணியாக சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.