ஹோம் /தேனி /

தேனி சுருளி அருவியில் குளிக்க அனுமதி- மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

தேனி சுருளி அருவியில் குளிக்க அனுமதி- மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

X
சுருளி

சுருளி அருவி

தேனி சுருளி அருவியில் குளிப்பதற்கு அனுமதியளித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

சுருளி அருவிப் பகுதியில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குளிக்க வனத்துறை சார்பாக கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அருவிப்பகுதியில் நீர்வரத்து சீர் ஆனதைத் தொடர்ந்து மீண்டும் அருவி பகுதியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி. சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக ஸ்தலமாகவும் சுருளி அருவி விளங்கி வருகிறது .

தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சுருளி அருவிக்கு வந்து நீராடி மகிழ்வர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் தேனி வழியாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் சுருளி அருவிக்கு வந்து சுருளி அருவிப்பகுதியில் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்தி அருவி பகுதியில் குளித்த பின்னரே சபரிமலைக்கு செல்வர்.

தற்போதைய நாட்களில் சுருளி அருவிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக சுருளி அருவி பகுதியில் திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த இரண்டு நாட்களாக சுருளி அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குளிப்பதற்கு வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டிருந்தது

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சுருளி அருவிப்பகுதியில் நீர்வரத்து குறையும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நாளில் தற்போது தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை குறைந்ததால் அருவிப் பகுதியில் நீர் வரத்து சீரானது. நீர்வரத்து குறைந்த உடனே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மீண்டும் அனுமதி அளித்துள்ளனர் .

பள்ளி விடுமுறை நாளில் சுருளி அருவி மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni