ஹோம் /தேனி /

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

X
கவுமாரியம்மன்

கவுமாரியம்மன் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

Theni Disitrict News : கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

ஆன்மீக பக்தர்களுக்கு உன்னத மாதமாக கார்த்திகை மாதம் விளங்கி வருகிறது. கார்த்திகை மாதத்தில் தெய்வங்களின் சக்திகள் அதிகரித்து காணப்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கார்த்திகை மாத விரத தினமான கார்த்திகை அமாவாசை வழிபாடு தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்றது. அதன்படி முன்னோர்களுக்கும், பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தும் முக்கிய நாளாக, இந்த கார்த்திகை அமாவாசை கருதப்படுகிறது.

இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால், பித்ரு தோஷம் மூதாதையர் சாபம் திருமணத்தடைகள் காரிய தடைகள் விலகி சுபிட்சம் பெறலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்.....

இந்த நாளை ஒட்டி திருச்செந்தூர், ராமேஸ்வரம், சுருளி, பவானி, கூடுதுறை போன்ற நதி, கடல் நிலையில் உள்ள கோயில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, தங்கள் பித்ரு தோஷம் சர்ப்ப தோஷம் நீங்க மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இதேபோல் தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியில் உள்ள முல்லையாற்றின் கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தும், வழிபாடு செய்தும், ஆற்றில் நீராடி பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கியும் வழிபாடு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகில் இருக்கும் கண்ணீஸ்வரமுடையார் கோயிலுக்கு சென்று ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கார்த்திகை மாதம் அமாவாசையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

First published:

Tags: Local News, Theni