கோடை காலங்களில் இயல்பாகவே தட்ப வெப்ப நிலை அதிகமாக இருப்பதால், மக்கள் அதிகம் தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்குவதால் இவற்றின் விற்பனை அதிகரிக்கும். ஜனவரி முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் தர்பூசணி மற்றும் இதர நீர் பழங்களின் விற்பனை அதிகரித்தாலும், தற்போதே தேனி மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மதிய வேளைகளில் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் கம்பம் சின்னமனூர், கூடலூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளதால், தர்பூசணி வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி வியாபாரிகள் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தர்பூசணி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். கிலோ 20 ரூபாய்க்கும், மொத்தமாக விற்கும்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறுகின்றனர். சில்லரை விற்பனையில் ஒரு பீஸ் தண்ணீர் பழம் பத்து ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும் கூறுகின்றனர். தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், தர்பூசணி விற்பனை கம்பம், சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் தர்ப்பூசணி வியாபாரிகள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni