ஹோம் /தேனி /

தேனியில் பைக் திருடனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..

தேனியில் பைக் திருடனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..

X
பைக்

பைக் திருடனுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்

Theni District News : தேனி மாவட்டம் உத்தம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை மக்கள் கட்டிவைத்து அடித்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பட்ட பகலில் மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார்.

இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற அடையாளம் தெரியாத நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து அருகில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

அடையாளம் தெரியாத மர்ம நபர் இருசக்கர வாகனம் திருட முயன்றதையடுத்து, பொதுமக்கள் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததனர். அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : தேனி-போடிநாயக்கனூர் ரயில் பாதையில் நவீன ஆய்வு - மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி பகுதியிலும் நேற்று இதே மர்ம நம்பர் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் கூறினர்.

முன்னுக்குப் பின் முரணாக பேசும் நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரால் உத்தமபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni