முகப்பு /தேனி /

மத்தியபிரதேசத்திற்கு வேலைக்கு சென்ற தேனி சிறுவர்கள் மாயம்.. மீட்டு தர கோரி பெற்றோர்கள் மனு!

மத்தியபிரதேசத்திற்கு வேலைக்கு சென்ற தேனி சிறுவர்கள் மாயம்.. மீட்டு தர கோரி பெற்றோர்கள் மனு!

X
மனு

மனு அளித்த பெற்றோர்கள்

Theni | வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களிடம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் வேலையை விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்வேல்புரம் பகுதியில் இருந்து வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்ற பழங்குடியின சிறுவர்கள் மூன்று பேர் மாயமான நிலையில், சிறுவர்களை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் வேதனையுடன் புகார் அளித்துள்ளனர் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வேலப்பர் கோவில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை சேர்ந்த‌ 16 வயது உடைய பட்டவராண்டி, 15 வயதுடைய ஞானவேல் , 14 வயதுடைய தமிழரசன் ஆகிய மூன்று சிறுவர்களையும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த இருவர், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதிக்கு இட்லி கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர்.

ஆறு மாதங்களாக அங்கு வேலைக்கு சென்று அவரது பெற்றோர்களிடம் சிறுவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் மூன்று பேரும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை என கூறப்படுகிறது.

வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களிடம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் வேலையை விட்டு சென்று விட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆகிறது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறியதாக சிறுவர்களின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பெற்றோர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni