ஹோம் /தேனி /

தேனியில் ஊராட்சி மன்ற தலைவரின் கழுத்தை கத்தியால் அறுத்த பைக் ஆசாமிகள் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தேனியில் ஊராட்சி மன்ற தலைவரின் கழுத்தை கத்தியால் அறுத்த பைக் ஆசாமிகள் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

கழுத்தறுக்கப்பட்ட

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறும் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை

Theni District Panchayat council president attacked | தேனியில் ஊராட்சி மன்ற தலைவர் மர்ம நபர்களால் நடுரோட்டில் கழுத்தறுக்கப்பட்டார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியில் ஊராட்சி மன்ற தலைவர் மர்ம நபர்களால் நடுரோட்டில் கழுத்தறுக்கப்பட்டார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரில் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகிப்பவர் பிச்சை(52) . இவர் நேற்று முன்தினம் இரவு அரண்மனைப்புதூரில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென கத்தியால் இவரின் கழுத்தை அறுத்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார். இதனை கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதையும் படிங்க : கொலை செய்யப்பட்ட கம்பம் வாலிபரின் உடல் 10 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு..

இந்நிலையில், ரத்தக்காயத்துடன் கீழே விழுந்து கிடந்த அவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரை கொலை செய்யும் நோக்கத்தில் மர்ம நபர்கள் அவரது கழுத்தை கத்தியால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் காயம் ஆழமாக படாததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பழனிச்செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில் வேகத்தடை அருகே வரும் பிச்சையை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கழுத்தில் தாக்கியபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுவதும், அப்பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை தூக்குவதுமான காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni