Home /theni /

Theni | இபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் - தேனியில் பரபரப்பு 

Theni | இபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் - தேனியில் பரபரப்பு 

தேனி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

தேனி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

Theni | தேனியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் எடப்பாடி ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒற்றை தலைமை விவகாரம்:

கடந்த இரு வார காலத்துக்கும் மேலாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவின் பொதுக்குழு - செயற்குழு கூட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ்ஸால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்-க்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்-க்கு எதிராக திரும்பியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்

இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இன்று மாலை நடத்திய கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே க.புதுப்பட்டியில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.டி.கே.ஜக்கையன் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளான புதுப்பட்டி பேரூராட்சி செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சோலை ராஜா, சின்னமனூர் ஒன்றிய அவை தலைவர் கண்ணன், கோம்பை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் மிகுந்த பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய ஜக்கையன், ’அதிமுக பிரிந்த போது கட்சியை மீட்டெடுத்து ஒற்றைத் தலைமை என 4 வருடம் முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதேபோல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி கட்சியை மீட்டெடுத்து ஒற்றைக் தலைமை வகித்து கட்சியை வழிநடத்த உள்ளார்.

63 எம்.எல்.ஏக்கள், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். தேனி மாவட்டத்திலும் அனைத்து நிர்வாகிகளும் ஆதரவாக உள்ளனர் என்றார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகப் பேசி கொண்டிருக்கும் போது 10-க்கும் மேலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து முழக்கமிட்டனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ்பி எதிராக முழக்கமிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தியது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி