Union
Budget 2023

Highlights

ஹோம் /தேனி /

தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்

தேனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்

X
பாப்புலர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்

Theni | தேனி மாவட்டம் கம்பம் நகரில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

சீல் வைத்த அதிகாரிகள் :

நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு அந்த இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களை போலீசார் சீல் வைத்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து இன்று தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் சாலையில் உள்ள சொசைட்டி பின்புறம் இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து பூட்டி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க : ஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - தேனி கலெக்டர்

நான்கு மாதங்களுக்கு முன்பே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தை காலி செய்து, வேறு ஒருவருக்கு அலுவலகத்தை வாடகைக்கு விட்டதாகவும் அதற்கு உரிய ஆவணம் வைத்திருப்பதாகவும் இடத்தின் உரிமையாளர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கூறி சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் அவரை சமாதானம் செய்த போலீசார் சட்ட நடவடிக்கைக்கு உட்படும்படி அவரை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அலுவலக வாயிலுக்கு சீல் வைத்து சென்றனர்.

First published:

Tags: Local News, Theni