தேனி மாவட்டம் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
மருத்துவ பணிகளில் அயராது உழைத்து கொண்டிருக்கும் செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவரின் பிறந்த நாளான மே 12ம் தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், கொரோனா பரவலுக்கு பின்பு சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக தற்போதைய ஆண்டுகளில் செவிலியர் தினம் மேலும் சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மே 12ம் தேதி ஆன செவிலியர் தினத்தன்று செவிலியர்களாக பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை கௌரவ படுத்தவும் செவிலியர்கள் செய்து வரும் பணிகளை பாராட்டியும் தன்னார்வலர்கள் சார்பாக செவிலியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் முருகன், மருத்துவர் காஞ்சனா, மருத்துவர் பூர்ணிமா ஆகியோர்கள் முன்னிலையிலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கான பாராட்டு விழா தேனீக்கள் அறக்கட்டளையினர் , தன்னார்வலர்கள் மற்றும் ரெட் கிராஸ் அமைப்பினர் சார்பாக கொண்டாடப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செவிலியர்களின் பணியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து கேக் வெட்டியும் , மரக்கன்று நட்டும், மருத்துவமனையில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் செவிலியர் தினத்தை கொண்டாடினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni