முகப்பு /தேனி /

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் அவசியம் என்ன? உத்தமபாளையம் ஒன்றியம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் அவசியம் என்ன? உத்தமபாளையம் ஒன்றியம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு

Theni News : தேனி மாவட்டம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

நாடு முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்குவதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம், மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டம் முழுவதும் இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசின் சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு ஒன்றிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள 82 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதற்கான மையங்கள் தொடங்கப் பட்டு தன்னார்வலர்கள் மூலம் கற்போருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட, எழுத்தறிவு பெறாத அனைவரையும் இத்திட்டத்தில் பயன்பெற செய்து முழு எழுத்தறிவு பெற்ற ஒன்றியமாக மாற்றுவதற்கான நோக்கமாக உள்ளது. இதனால் அனைவரையும் எழுத்தறிவு பெறாத அனைவரையும் எழுத்தறிவு பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விழிப்புணர்வு பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தமபாளையம் ஒன்றியத்தில் பேரணிகள், துண்டு பிரசுர விநியோகம் மற்றும் கையெழுத்து இயக்கம் ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள அனைவரையும் மையத்தில் சேர்த்து கல்வி வழங்க நடவடிக்கைகள் தன்னார்வலர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் உள்ள 66 வார்டுகள் உட்பட, 28 கிராம ஊராட்சி குடியிருப்புகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட பள்ளிகளின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது. இந்த பிரச்சார நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். உத்தமபாளையம் ஒன்றிய அளவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருணா தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர் புவனேஸ்வரி ஒருங்கிணைப்பில் இந்த பணிகள் நடைபெற்றது. அந்தந்த குறுவள மையத்திற்குட்பட்ட பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்லக்கண்ணு, ஆரோக்கியராஜ், அழகுராஜா, பாண்டீஸ்வரி, வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni