முகப்பு /தேனி /

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் நகர்வலம்.. தேவதைபோல் வேடமணிந்து வரவேற்ற சிறுமிகள்!

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் நகர்வலம்.. தேவதைபோல் வேடமணிந்து வரவேற்ற சிறுமிகள்!

X
தேனி

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் நகர்வலம்

Meenakshi Sundareswarar Thirukalyana Festival : தேனியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரரின் நகர்வலம் புறப்பாடு திருக்கல்யாண கோலத்தில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரரின் நகர்வலம் புறப்பாடு திருக்கல்யாண கோலத்தில் நடைபெற்றது. தேவதைகள் போல் வேடம் அணிந்த சிறுமிகள் ராட்சச கிரேனில் இருந்து மலர் தூவி மீனாட்சி சுந்தரேஸ்வரரை வரவேற்றனர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பங்களா மேடு பகுதியில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் தற்போது நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் யானை வாகனத்தில் நகர்வள புறப்பாடு நடைபெற்றது. தேனி பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் நடைபெற்றது. அப்போது தேனி ஜி.எச்.சாலையில் திருமண கோலத்தில் நகர்வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை தேவதை போல் வேடம் அணிந்த 3 சிறுமிகள் ராட்சச கிரேனில் நின்றிருந்தவாறு மலர்களை தூவி மீனாட்சி சுந்தரேஸ்வரரை வரவேற்றனர்.

தேவதைகள் போல் வேடம் அணிந்த சிறுமிகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை ராட்சத கிரேனில் நின்றிருந்த சிறுமிகள் பூக்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீது மலர் தூவி வரவேற்று ஊர்வலமாக சென்றன. நகர்வலம் வழியில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர். சிறுமிகள் தேவதைபோல் வேடம் அணிந்து ராட்சத கிரேனில் வலம் வந்ததை அப்பகுதி மக்கள் ஏராளமான பார்த்துச் சென்றனர்.

    First published:

    Tags: Local News, Theni