தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14,700 ஏக்கர் ஆயக்கட்டு பகுதி, கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது . முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக இந்த 14,707 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளிலும் இரு போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது . ஆண்டுதோறும் ஜூன் 1 - ஆம் தேதி, முதல் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம் .
ஆனால் கடந்த சில வருடங்களாக முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 1 ஆம் தேதி வாக்கில் போதிய நீர் இருப்பு இல்லாமல் இருந்த காரணத்தால் ஜூன் 1 - ஆம் தேதி அணை திறக்கப்பட வில்லை . மாறாக ஜூலை , ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் திறக்கப்பட்டது . இதனால் இருபோக சாகுபடி செய்ய முடியாமல் ஒரு போக சாகுபடி மட்டுமே செய்யப்பட்டது . ஆனால், தற்போது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக இந்த மாதம் ஜூன் 1 ஆம் தேதி அணை திறக்கப்பட்டது.

நெல் நடவு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்..
தேனி மாவட்டம் , கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கரும் , போடி வட்டத்தில் 488 ஏக்கரும் , தேனி வட்டத்தில் 2,412 ஏக்கரும் என மொத்தம் 14,707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது .
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நெல் நடவு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்..
நடவு பணி தீவிரம் :-
இந்த ஆண்டு சரியான நேரத்தில் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் இரண்டு போகம் முழுமையாக செய்ய முடியும் என்ற நோக்கில், விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தொடங்க ஆரம்பித்தனர். அதன்படி கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல் நடவுப் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

நெல் நடவு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்..
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கோ - 51, வைகை -1, கோ -509 போன்ற ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இது அதிக மகசூல் கிடைக்கக்கூடிய ரகம் ஆகும். இப்பகுதி விவசாயிகள் பொதுவாக இரண்டாம் போகத்தில் அதிகம் பயிரிடும் விதை நெல்லான கோ -509 ரக நெல்லை முதல் போகத்தில் பயிரிட்டுள்ளனர் . இந்த ரக பயிரானது மழைக்காலங்களிலும் சாய்ந்து விடாமல் நன்றாக விளைச்சல் தரக்கூடியது. மேலும், இது 105 நாள் முதல் 110 நாட்களில் விளைச்சல் தரும் குறுகிய கால பயிர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல் நடவு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்..
விவசாயிகள் கோரிக்கை :-
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், " தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்பட்டு உள்ளதால் இரு போகம் பெரும் வகையில் விரைவாக நடவு பணியைத் தொடங்கிவிட்டோம். இந்த பக்கத்திற்கு கோ- 509 ரக விதைகளை பயிரிட்டு உள்ளம். பருவ மழை மற்றும் காற்று காலங்களில் தாங்கக்கூடிய கோ -509 ரக விதை நெல்லை பயிர் செய்துள்ளோம். மேலும், அரசு வழங்கும் மானிய விதை நெல் குறிப்பிட்ட காலத்தில் விரைவாக குடுத்தால் தான் நட முடியும். வேளாண் விற்பனை நிலையங்களில் தாமதமாக தருவதால் தனியாரிடம் விதை நெல் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்து உள்ளனர்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.