முகப்பு /தேனி /

முல்லைப்பெரியாறு அணை பகுதிகளில் கொட்டும் மழை.. உயரும் நீர்மட்டத்தால் தேனி விவசாயிகள் குஷி!

முல்லைப்பெரியாறு அணை பகுதிகளில் கொட்டும் மழை.. உயரும் நீர்மட்டத்தால் தேனி விவசாயிகள் குஷி!

X
முல்லை

முல்லை பெரியார் அணை

Theni rain | முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

  • Last Updated :
  • Theni, India

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது. இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 413 கன அடியாக வருவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.

தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20அடியாக உள்ளது.அணையிலிருந்துதமிழகப் பகுதிக்கு தற்போது திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கன அடி ஆகும் அணையின் மொத்த கொள்ளளவு 1943மில்லியன்கன அடி ஆக உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக முற்றிலும் அணைக்கு நீர்வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த சூழ்நிலையில் தற்பொழுது நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து 413 கன அடியாக வருவதும் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளதும் விவசாயிகளிடம் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Farmers, Heavy rain, Local News, Theni