பொதுமக்கள் தங்களுக்குள்ள சளி, இருமலை அலட்சியமாக கருதுவதால் அது காசநோயாக இருக்கும் பட்சத்தில் குணப்படுத்த முடியாத காச நோயாக உருவெடுக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் தமிழக அரசின் நடமாடும் xray வாகனம் மூலம் இலவச பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நவீன நடமாடும் xray, வாகனத்தில் என்னென்ன சிறப்புகள், என்னென்ன வசதிகள் உள்ளன?எவ்வாறு மருத்துவ அலுவலர்கள் செயல்படுகின்றனர் என்பது பற்றிய முழு விவரத்தை தற்போது காணலாம்.
இலவச பரிசோதனை முகாம்
தேனி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளாக காசநோய் ஒழிப்பு திட்டத்தின் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் பொது மக்களுக்கு எக்ஸ்ரே எடுத்து இலவசமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பொது மக்களுக்கு காச நோய் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததால் காசநோய் ஒழிப்பு திட்டம் ( NTEP ) சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இலவசமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சாதாரண சளி, இருமல் இருந்தால் அதனை பொருட்படுத்தாமல் இருப்பதால் பின்னால் அது குணப்படுத்த முடியாத காச நோயாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் காசநோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய தமிழக அரசின் சார்பில் இலவசமாக நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் பொதுமக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு, காசநோய் அறிகுறி இருக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், பெரியகுளம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு வட்டாரத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடமாடும் X RAY வாகனம் மூலமாக பொதுமக்களுக்கு X RAY மற்றும் சளிமாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ அதிகாரிகள் தேர்வு செய்து செல்லும் இடத்தில் காசநோய் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களுக்கு இலவசமாககாசநோய் உள்ளதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
நடமாடும் இலவச எக்ஸ்ரே வாகன மூலம் நாளொன்றுக்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட காசநோய் மையத்தின் துணை இயக்குனர் ராஜ பிரகாஷ் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் மாவட்ட நல கல்வியாளர் தர்மேந்திர கண்ணா தலைமையில் பரிசோதனை முகாம் நடைபெற்றுவருகிறது.
எக்ஸ்ரே வாகனத்தில் பரிசோதனைக்காக வரும் பொதுமக்களிடம் இருந்து முதலில் தகவல் பதிவு செய்யப்பட்டு, பின் நவீன எக்ஸ்ரே இயந்திரம் மூலம் எக்ஸ்ரே செய்யப்பட்டு நோயாளிகளுக்கு whatsapp மூலம் எக்ஸ்ரே படம் அனுப்பப்படுகிறது.
நோயரிடம் இருந்து எடுக்கும் எக்ஸ்ரே படம் மருத்துவர் அதிகாரிகளுக்கு எக்ஸ்ரே வாகனத்தில் உள்ள மருத்துவ அலுவலர்கள் பதிவு செய்கின்றனர். காசநோய் அல்லது வேறு ஏதாவது நோய் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேல் பரிசோதனைக்காக லேபுக்கு அனுப்பப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டிப்பட்டி : தனியார் கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்
செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni