ஹோம் /தேனி /

தேனி : மியோவாக்கி காடுகள் உருவாக்க மரங்களை நட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள்

தேனி : மியோவாக்கி காடுகள் உருவாக்க மரங்களை நட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள்

தேனி

தேனி மியோவாக்கி காடுகள்

Theni | தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் மியோவாக்கி காடுகள் அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் கூடலூர் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக இரண்டாவது அடர்வன குறுங்காடுகள்( மியோவாக்கி ) அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மியோவாக்கி காடுகள்

தேனி மாவட்டத்தில் கூடலூர் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சமூகம் சார்ந்த பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் மரம் நடுதல், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிழற்குடை அமைத்தல், சாலை ஓரங்களில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு உணவளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்யப்பட்டுவருகிறது.

மரம் நடும் நிர்வாகிகள்

இந்த சங்கத்தின் சார்பாக கூடலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடர்வன குறுங்காடுகள்( மியோவாக்கி ) கடந்தாண்டு அமைக்கப்பட்டது. அதேபோல இந்தாண்டு கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மியோவாக்கி முறையில் அடர்வனக் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்விற்கான துவக்க விழா நடைபெற்றது.

மரக் கன்றுகள்

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியில் குளூமையான சூழலை உருவாக்கவும் அதிகளவு மழை பொழிவை ஏற்படுத்தவும் மியோவாக்கி காடுகள் அமைக்கப்படுவதாக ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மரக் கன்றுகள்

ஒரு ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட 30 வகையான நாட்டு மரங்கள் நடப்பட்டு அடர்வன குறுங்காடுகளாக உருவெடுக்க உள்ளது.

இந்த நிகழ்வை மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி துவக்கி வைத்தார். மேலும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் , சின்னமனூர் வர்த்தக சங்க தலைவர் உதயகுமார் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni