ஹோம் /தேனி /

தேனியில் நடந்த மினி மாரத்தான் போட்டி.. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

தேனியில் நடந்த மினி மாரத்தான் போட்டி.. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

X
தேனியில்

தேனியில் நடந்த மினி மாரத்தான் போட்டி

Mini Marathon : தேனி மாவட்டத்தில் பென்னி குவிக் பிறந்தநாளை முன்னிட்டு மாராத்தான் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கட்டிய ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான ஜனவரி 15ம் தேதி அரசு விழாவாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் உள்பட 5 மாவட்ட மக்களும் மரியாதைக்குரியவராகவே பார்க்கின்றனர்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும் விவசாய சங்க தலைவர்களும்சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளையும் விளையாட்டு போட்டிகளையும் நடத்துவர். அந்த வகையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். கூடலூர் வடக்கு கால்நிலையம் முதல் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியினை உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மது குமாரி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புது ராஜா ஏற்பட்டின்பேரில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியானது மக்கள் மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. அதேபோல் மாரத்தான் போட்டி நிறைவடைந்த உடன் விரைவு சைக்கிள் போட்டியும் கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விரைவு சைக்கிள் போட்டியினை கூடலூர் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த சைக்கிள் போட்டி கூடலூர் வடக்கு காவல் நிலையம் முதல் பென்னிகுவிக் மணிமண்டபம் வரை நடைபெற்றது. விரைவு சைக்கிள் போட்டி மற்றும் மினி மரத்தான் போட்டியில் தேனி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்ட மாணவர்களும் பங்கேற்றனர். காலை 7:00 மணிக்கு தொடங்கிய மாரத்தான் மற்றும் விரைவு சைக்கிள் போட்டி 10 மணி வரை நடைபெற்றது. பள்ளி நாளில் போட்டி நடைபெற்றதால் இந்த போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை எடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

போட்டியில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு விடுமுறை எடுத்து உள்ளதால் போட்டினை விடுமுறை நாளில் நடத்தி இருக்கலாம் என பள்ளி சிறுவர்களின் பெற்றோர்களும், விடுமுறை நாளில் போட்டியினை நடத்த காவல்துறை சார்பில் அனுமதி அளித்து இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Theni