முகப்பு /தேனி /

தேனியில் கொடிமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம்.. பக்தர்கள் பரவசம்!

தேனியில் கொடிமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம்.. பக்தர்கள் பரவசம்!

X
கொடிமரத்தில்

கொடிமரத்தில் பால்

Theni news | தேனியில் பகவதி அம்மன் கோயில் கொடியேற்ற நிகழ்வின்போது கொடி மரத்தில் இருந்து திடீரென பால் வடிந்ததால் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் . இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நிகழ்வான கொடியேற்றம் நிகழ்ச்சி தற்போது தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது கொடி மரத்திலிருந்து திடீரென பால் வடிந்தது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கோயிலுக்கு வருகை தந்து ஆச்சரியத்துடன் பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.

இதையும் படிங்க | தேனி வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழா.. குதிரை வாகனத்தில் நகர்வலம்..

பின்னர் மூலவருக்கு பூஜைகள் நடைபெற்ற பின் கொடி மரத்துக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலய மூலவரான பகவதி அம்மனுக்கு வண்ண பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது

top videos

    கொடி மரத்தில் பால் வடிந்ததால் அதனை காண ஏராளமான பொதுமக்கள் கோவில் வளாகத்திற்கு குவிந்து அதிசிய நிகழ்வை பக்தி பரவசத்துடன் பார்த்து சென்றனர்.

    First published:

    Tags: Local News, Temple, Theni