முகப்பு /தேனி /

பட்டப்பகலில் நிர்வாணமாக ஊருக்குள் வாக்கிங் சென்ற நபர்.. தேனி சோலை தேவன்பட்டியில் போதை ஆசாமியால் பரபரப்பு

பட்டப்பகலில் நிர்வாணமாக ஊருக்குள் வாக்கிங் சென்ற நபர்.. தேனி சோலை தேவன்பட்டியில் போதை ஆசாமியால் பரபரப்பு

X
நிர்வாணமாக

நிர்வாணமாக செல்லும் நபர்

Theni News | தேனி மாவட்டம் குப்பிநாயகன்பட்டி அருகே உள்ள சோலை தேவன் பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதுடைய சங்கர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சோலை தேவன்பட்டியலில் பட்டபகலில் காலை சுமார் 7 மணியளவில் மது போதையில் முழு நிர்வாணமாக ஊரில் வலம் வந்தவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் குப்பிநாயகன்பட்டி அருகே உள்ள சோலை தேவன் பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதுடைய சங்கர். இவர் சொந்தமாக டிராக்டர் வண்டியை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 7:00 மணி அளவில் மது அருந்திவிட்டு ஆடைககள களைந்து பட்ட பகலில் நிர்வாணமாக ஊரில் வலம் வந்தார்.

இதையடுத்து ஊர் பொதுமக்கள் அவரை பிடித்து வைத்து, வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம்முடிந்த ஒருவர் மது போதையில் நிர்வாணமாக ஊரில் பட்ட பகலில் வலம் வந்த சம்பவம் கிராமப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

First published:

Tags: Local News, Theni