ஹோம் /Theni /

Theni: தேனி - மதுரை ரயில் சேவை: எந்த ஊர்ல எத்தனை மணிக்கு ரயில்? அட்டவணை இது தான்..!

Theni: தேனி - மதுரை ரயில் சேவை: எந்த ஊர்ல எத்தனை மணிக்கு ரயில்? அட்டவணை இது தான்..!

X
தேனி

தேனி - மதுரை

Theni District : மதுரை டூ தேனி இயக்கப்பட்டு வரும் ரயிலின் கால நேர அட்டவணை பற்றி அறிந்து கொள்வோம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை - தேனி - போடி ரயில் நிலையம் இடையேயான 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே நிதி ஒதுக்கீட்டில் சுணக்கம் ஏற்பட்டதால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றன. 2015-ஆம் ஆண்டுகள் பணிகள் நிறைவடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், அப்போது முதற்கட்ட பணிகள் கூட நிறைவடையாமல் இருந்தது.

மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததில், முதற்கட்ட பணிகள் முடிவடைந்து மே 27 ஆம் தேதி முதல் தினசரி ரயில் இயக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மே 27-ம் தேதி முதல் 12 பெட்டிகளுடன் காலை 8:30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், வடபழஞ்சி நிறுத்தத்தில் 8.45-க்கும், உசிலம்பட்டியில் 9.05-க்கும், ஆண்டிபட்டியில் 9.20-க்கும் இறுதியாக தேனியை காலை 9.35-க்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் தேனியில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு ஆண்டிபட்டியில் 6.30 மணிக்கும், உசிலம்பட்டியில் 6.45 மணிக்கும் வந்து இறுதியாக மதுரை ரயில் நிலையத்திற்கு இரவு 7.35 மணிக்கு சென்றடைகிறது.

புதிய நேர அட்டவணை :-

இந்த நேர அட்டவணை ஜூன் 1-ஆம் தேதி முதல் ரயிலின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது. அதன்படி புதிய அட்டவணைப்படி மதுரை - தேனி விரைவு ரயில் எண் (06701)

மதுரையில் இருந்து காலை 08:05 மணிக்கு புறப்பட்டு,

8.20க்கு மணிக்கு வடபழஞ்சி,

8.53 மணிக்கு உசிலம்பட்டி,

9.15க்கு ஆண்டிப்பட்டி, 09.35 மணிக்கு தேனியை வந்தடைகிறது.

அதேபோல தேனியிலிருந்து மாலை வேளையில் செல்லும் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு ரயில் எண் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு

06.34க்கு ஆண்டிப்பட்டி,

06.54 மணிக்கு உசிலம்பட்டி,

07.29 மணிக்கு வடபழஞ்சி என 07.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடைகிறது.

செய்தியாளர்: சுதர்ஸன்

First published:

Tags: Local News, Madurai, Theni