முகப்பு /தேனி /

தேனி மக்களுக்கு குட்நியூஸ்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை! எதற்கு தெரியுமா?

தேனி மக்களுக்கு குட்நியூஸ்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை! எதற்கு தெரியுமா?

X
தேனி

தேனி உள்ளூர் விடுமுறை

Theni Veerapandi Thiruvila | தேனி வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் திருவிழா வரும் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனியில் புகழ்பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மே 12ம் தேதி உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள  கௌமாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா மே 9ஆம் தேதி தொடங்கி மே 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வீரபாண்டிகௌமாரியம்மன்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேரோட்டம் நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வருவதுண்டு.

ALSO READ | யானைகள் இடம்பெயர்ந்தது.. சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி..

இதனால், தேனி மாவட்டத்திற்கு மே 12ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் மே 27ஆம் தேதி  (சனிக்கிழமை) அன்று பணிநாளாக செயல்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும்,உள்ளுர் விடுமுறை தினத்தில் , அவசர அலுவல்களை கவனிக்கும் கருவூலம் சார் நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Holiday, Local News, Theni