Home /theni /

தொடர் மழையால் ஏலக்காய் விளைச்சல் பாதிப்பு - விவசாயிகள் கவலை

தொடர் மழையால் ஏலக்காய் விளைச்சல் பாதிப்பு - விவசாயிகள் கவலை

தேனி

தேனி - ஏலக்காய் தோட்ட விவசாயிகள்

Theni Cardamom Farmers : தமிழக- கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் பருவ மழை மற்றும் சூறைக் காற்றினால் ஏலச் செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் ஏலக்காய் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்

தேனி மாவட்டம் அருகே உள்ள தமிழக- கேரள எல்லைப் பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, அன்னையார் தொழு, கட்டப்பனை, சாந்தான்பாறை ஆகிய இடுக்கி மாவட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் ஏலத்தோட்டங்களில் 75 சதவீத தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் வருடந்தோறும் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் ஏலச்செடிகளில் ஏலக்காய்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யப்படும் தருணத்தில் வேர் அழுகல் மற்றும்
தட்டை அழுகல் நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றது எனவும், இடுக்கி மாவட்டத்தில் வீசிய சூறைக் காற்றினால் தட்டை ஒடிந்து, விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஏலக்காய் தோட்டம்


தற்போது நடுத்தரமான ஏலக்காய் 700 முதல் 800 ரூபாய் வரை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வந்தும் செடிகளில் ஏற்பட்ட நோய் தாக்குதலால் ஏல விவசாயிகள் இந்த பருவத்தில் விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகமான பணம் செலவழித்து ஏலத் தோட்டங்களில் மருந்து தெளித்தும் தோட்ட மராமத்து பணிகள் செய்தும் உரிய வருமானத்தை எடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக ஏல விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஏலக்காய் விவசாயியான இஸ்ஹாக் கூறுகையில் , " ஏல விவசாயத்தில் ஆண்டுக்கு 6 முறை வெள்ளாமை பெற முடியும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாகவே ஆண்டுக்கு 6 முறை விளைச்சல் எடுக்க கூடிய நிலைமாறி 4 முதல் 5 முறை மட்டுமே விளைச்சல் எடுக்க முடிகிறது. அதுவும் முழுமையான விளைச்சலைப் பெற முடியவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விலை ஏறிய நேரத்திலும் ஏலச் செடியில் தாக்கிய நோய்  காரணமாக ஏலக்காய்  வரத்து இல்லாமல் போனது. தற்போது ஏலக்காய் சந்தையில் 800 ரூபாய் முதல் விற்பனையாகி வருகிறது . இந்தாண்டு இடிக்கி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையாலும், நோய் தாக்குதல் காரணமாகவும் ஏலக்காய் அழுகிப் போதிய விளைச்சலைப் பெற முடியவில்லை" என்றனர்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி