முகப்பு /தேனி /

தேனியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து டிஜிட்டல் கண்காட்சி..!

தேனியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து டிஜிட்டல் கண்காட்சி..!

X
புகைப்பட

புகைப்பட கண்காட்சி 

Theni News | தேனி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு ஆகியவை குறித்த மூன்று நாள்புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு ஆகியவை குறித்த 3 நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா துவக்கி வைத்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் சார்பாக தேனி என். ஆர்.டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் தியாகங்கள் உள்ளிட்டவை குறித்து காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க; நாடு முழுவதும் தீவிரமாய் பரவும் காய்ச்சல்... இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க... மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்..!

நிகழ்ச்சியின் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டனர். பின்னர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்தியா ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்று இருப்பதை கௌரவிக்கும் வகையில் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 'தொழில் தொடங்குவதற்கு பல்வேறு கடன் உதவிகளை அரசு வழங்கி வருவதாகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு புதிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல் கல்லூரி மாணவ மாணவியர்களும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து அதற்கு ஏற்ப தங்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் சிவக்குமார், மதுரை கள விளம்பர உதவியாளர் போஸ்வெல் ஆசிர் மற்றும் திருநெல்வேலி கள விளம்பர உதவியாளர் வேலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

நிகழ்ச்சியின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

First published:

Tags: Local News, Theni