ஹோம் /தேனி /

‘துணிவு’ தரமான சம்பவம் - கொண்டாடும் தேனி அஜித் ரசிகர்கள்!

‘துணிவு’ தரமான சம்பவம் - கொண்டாடும் தேனி அஜித் ரசிகர்கள்!

X
துணிவு

துணிவு திரைவிமர்சனம் 

Theni Thunivu Public Review | நடிகர் அஜித்தின் 61வது திரைப்படமான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தேனி ரசிகர்களின் கருத்துக்களை கேட்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

நடிகர் அஜித்தின் 61வது திரைப்படமான துணிவு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் இளமையான தோற்றத்துடனும் , ரசிகர்களை கவரும் தோற்றத்துடன் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கியுள்ளார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து , ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், ஜி பி முத்து , ஜி எம் சுந்தர் , பவானி ரெட்டி , பகவதி பெருமாள் பிரேம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கூடலூர் சின்னமனூர் போடி தேனி பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .

நடிகர் அஜித்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களையும் பொது மக்களையும் கவர்ந்துள்ளதாக காட்சியை கண்டு களித்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Ajith fans, Local News, Theni, Thunivu