ஹோம் /தேனி /

பல்லுயிர் சமநிலை மேம்பாட்டுக்காக உத்தமபாளையத்தில் குறுங்காடு அமைக்கும் தன்னார்வலர்கள்

பல்லுயிர் சமநிலை மேம்பாட்டுக்காக உத்தமபாளையத்தில் குறுங்காடு அமைக்கும் தன்னார்வலர்கள்

குறுங்காடு அமைக்கும் தன்னார்வலர்கள்

குறுங்காடு அமைக்கும் தன்னார்வலர்கள்

Theni District News | தேனி மாவட்டத்தில் இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நன்செய் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் குறுங்காடுகளை உருவாக்கி வரும் நிலையில், உத்தமபாளையம் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ‘நன்செய்’ தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் நன்செய் தன்னார்வ அமைப்பின் சார்பாக பல்லுயிர்களுக்கான கானகம் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் முழுவதும் நன்செய் தன்னார்வை அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து தேனி மாவட்டம் முழுவதும் பனை விதைத்தல், மரத்தில் உள்ள ஆணிகளை பிடுங்குதல், நீர்நிலைகளை சுத்தப்படுத்துதல், சாலை ஓரம் செடி நடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை சார்ந்த சேவைகளை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இயற்கை வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நன்செய் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழக வனப்பகுதி, நிலங்கள் பறிபோகும் அபாயம்.. கேரளாவின் டிஜிட்டல் ரீசர்வேயை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்

அந்த வகையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள ஹாஜி கர்த்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், கல்லூரியின் பொருளாதாரத்துறை மற்றும் உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை இணைந்து, கல்லூரி வளாகத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் 100 க்கும் மேற்பட்ட வகையான 1,100 மரக்கன்றுகள் நட்டு பல்லுயிர்களுக்கான கானகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மழைப்பொழிவை அதிகரிக்கும் விதமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் குறுங்காடுகள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் , உத்தமபாளையம் பகுதியில் பல்லுயிர்களுக்கான கானகம் (குறுங்காடுகள்) அமைத்துள்ளனர் நன்செய் தன்னார்வ அமைப்பினர்.

இதையும் படிங்க : கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. கம்பம் மெட்டு, குமுளி சோதனை சாவடிகளில் சோதனை முகாம்..

கல்லூரி முதல்வர் Dr. H.முகமது மீரான் தலைமையிலும், கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் M.தர்வேஷ் முஹைதீன், கல்லூரி மேலாண்மை குழு தலைவர் S.செந்தல் மீரான் முன்னிலையிலும் குறுங்காடுகளை உருவாக்கும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் ஜே.ஆர்.சமர்த்தா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.பி.விஸ்வநாதன், நன்செய் நிறுவனர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் மற்றும் நன்செய் அமைப்பின் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், “பல்லுயிர் கானகம் தான் தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் அமையும் முதல் குறுங்காடு ஆகும். இதன் முலம் தேனி மாவட்டத்தின் பல்லுயிர் சமநிலை மேம்பாடு அடையும். சிற்றுயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கான வாழ்விட பரப்பு அதிகரிக்கும், சுற்றுச்சூழல் தரமும் மேம்படும்” என்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni