ஹோம் /தேனி /

அகவிலைப்படி வழங்க கோரி மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பினர் தேனியில் அரை நிர்வாண போராட்டம்

அகவிலைப்படி வழங்க கோரி மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பினர் தேனியில் அரை நிர்வாண போராட்டம்

தேனி

தேனி போராட்டம்

Theni District News | தேனி மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் 3% அகவிலைப்படி வழங்க கோரி அரை நிர்வாணம் போராட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பு சார்பில் 3% அகவிலைப்படி வழங்க கோரி அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

அரை நிர்வாண போராட்டம் :

தேனி நகரில் உள்ள மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக அக்டோபர் பதினொன்றாம் தேதி காலை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் தேனி கிளை தலைவர் பெருமாள் சாமி தலைமை தாங்கினார்.

இதையும் படிங்க:   தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்

இந்த போராட்டத்தில் தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் வழங்க வேண்டிய மூன்று சதவீதம் அகவிலைப்படியை வழங்காததை கண்டித்து ஆண்கள் மேலாடை சட்டை இன்றி அரை நிர்வாணமாகவும், பெண்கள் வாயில் கருப்பு துணியை கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni