Home /theni /

Theni | திராட்சை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள பயிற்சி முகாம்

Theni | திராட்சை விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள பயிற்சி முகாம்

தேனி திராட்சை விவசாயம்

தேனி திராட்சை விவசாயம்

தேனி மாவட்டத்தில் திராட்சை விவசாயத்தில் விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நாளை நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தேனி மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் திராட்சை விவசாயிகள் திராட்சை விவசாயத்தில் இரட்டிப்பு வருமானத்தை பெறுவதற்கான முயற்சிகள் குறித்த பயிற்சி வகுப்பு நாளை நடைபெற உள்ளது .

திராட்சை விவசாயம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான ஓடைப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பன்னீா் திராட்சை, அண்டை மாநிலமான கேரளம் மற்றும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திராட்சை அறுவடை நடைபெறும்.



இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் ஏற்றுமதி ரக திராட்சை சாகுபடி, பன்னீர் திராட்சையில் புதிய தொழில் நுட்பங்களை கையாள்வது குறித்து நாளை விவசாயிகளுக்கு காணொலியில் ஜூலை 13ல் பயிற்சி வழங்கப்படுகிறது.

திராட்சை விவசாயம்


 

கம்பம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி கிராமத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில் அவ்வப்போது திராட்சை விவசாயிகளுக்கு புனேவில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சி மையத்தின் சார்பாக திராட்சை விவசாயம் குறித்த ஆலோசனை வழங்கப்படும். அந்த வகையில் நாளை பன்னீர் திராட்சையில் புதிய தொழில் நுட்பங்களை கையாள்வது குறித்து நாளை விவசாயிகளுக்கு காணொலியில் பயிற்சி வழங்கப்படுகிறது.

திராட்சை விவசாயம்


புதிய ரகம்

கம்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திராட்சை விளைச்சல் நன்றாக இருந்தாலும், கருப்பு பன்னீர் திராட்சை இரண்டு ரகத்தில் விளைகிறது. கருப்பு பன்னீர் திராட்சை 40 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

திராட்சை விவசாயம்


விவசாயிகள் திராட்சை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவுரைப்படி திராட்சை விவசாயத்தை மேற்கொண்டால் அதிகப்படியான லாபத்தை ஈட்ட முடியும் எனவும் சின்னமனூர் பகுதிகளில் திராட்சை விவசாயத்தில் சில குறைபாடுகளை திராட்சை ஆராய்ச்சி நிலையம் கண்டறிந்துள்ளது.

திராட்சை விவசாயம்


இதனால் திராட்சையின் தரம் மற்றும் அதன் வெளிச்சம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அதனை சரிசெய்ய அப்பகுதி விவசாயிகளுக்கு அறிவுரையும் வழங்கவும், மஞ்சரி மெடிக்கா என்னும் புதிய ரக திராட்சையை இப்பகுதியில் விளைவித்து விவசாயிகள் பயன்பெற அறிவுரை வழங்கும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

மஞ்சரி மெடிக்கா என்னும் திராட்சை ஹெக்டேருக்கு 12 முதல் 15 டன் மகசூல் தருவதாகவும், இதில் வரும் கழிவுகளை வீணாக்காமல் பழச்சாறுக்கு பிறகு, இருக்கும் எஞ்சிய தோல் மற்றும் விதைகள் பிரிக்கப்பட்டு ஐஸ்கிரீம், தயிர் போன்ற பால் பொருட்களை வளப்படுத்தவும் ,மிட்டாய் கேக் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கும் பயன்படுவதாக திராட்சை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை சாகுபடி செய்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி அதிக லாபம் தரும் வகையில் உள்ள திராட்சை ரகத்தை பயிர் செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்சி வகுப்பு

மேலும் கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடியானாலும் ஏற்றுமதி ரகம், ஒயின் தயாரிப்பிற்கான ரகம் சாகுபடி முயற்சியை விவசாயிகள் கைவிட்டனர்.

மீண்டும் ஏற்றுமதி ரக திராட்சை, பன்னீர் திராட்சை சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல், நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல் வழிமுறைகளை விவசாயிகளுக்கு விளக்க திராட்சை ஆராய்ச்சி நிலையம் முடிவு செய்துள்ளது.

இந்த பயிற்சி முகாமில் புனே தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சோம் குவார், பெங்களூரு தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய முதுநிலை விஞ்ஞானி பிரக்திஷா, கோவை வேளாண் பல்கலை முதல்வர் ஐரின் வேதமணி ஆலோசனை வழங்குகின்றனர். விவசாயிகள் ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்து பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி