ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒரே நாளில் விடுப்பு எடுத்து போராட்டம்

தேனி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒரே நாளில் விடுப்பு எடுத்து போராட்டம்

காலியாக உள்ள இருக்கைகள்

காலியாக உள்ள இருக்கைகள்

Theni Disitrict News : தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் 309 பேர் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டதாக மாவட்ட நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இரண்டு நாள் சிறு விடுப்பு எடுத்து வேலை நிறுத்துப் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி பிரிவு அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகம் சத்துணவு பிரிவு அலுவலகம் 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் உதவியாளர் முதல் வளர்ச்சி அலுவலர்கள் வரை மொத்தம் 360 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : விடுதி மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி.. தேனியில் பரபரப்பு..

இந்நிலையில், பணி சுமை, உயர் அலுவலர்களின் நெருக்கடி, காலம் கடந்த ஆய்வுக் கூட்டங்கள், விடுமுறை காலங்களிலும் ஆய்வு கூட்டங்கள், கால இடைவெளி இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வற்புறுத்துதல், உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு விரைந்து வழங்க வேண்டுதல், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப கோருதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு என தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களை நியமிக்க வலியுறுத்துதல், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறு விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர் சங்கம் முடிவெடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்பட என மொத்தம் 309 பேர் பணிக்கு வராமல் சிறு விடுப்பு எடுத்துவேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni