ஹோம் /தேனி /

தேனியில் பயன்படுத்த முடியாத அரசு வாகனங்களை ஏலம் விடுவது தொடர்பான ஆய்வு 

தேனியில் பயன்படுத்த முடியாத அரசு வாகனங்களை ஏலம் விடுவது தொடர்பான ஆய்வு 

X
பயன்படுத்த

பயன்படுத்த முடியாத அரசு வாகனங்கள்

Theni District News : தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படாத நிலையில் இருக்கும் வாகனங்களை அதிகாரி ஆய்வு செய்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

அரசு துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களைஏலம் விடுவது வழக்கம். அரசு அதிகாரிகளுக்கு நிர்வாக பணிகளுக்காக அரசின் சார்பில் வாகனங்கள் கொடுக்கப்படுகிறது.

அரசு வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட பின் பயன்படுத்த முடியாமல் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும். இந்த ஏலம் மூலமாக அரசுக்கு வருவாய் கிடைப்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயன்படுத்த முடியாத வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் ஏலம் விடப்படும்.

அந்த வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை மாற்று திறனாளி நலத்துறை ஆகிய துறைகளில் பயன்படுத்திய பழுதடைந்த சுமார் 10க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் விரிசல்.. தேனியில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. 

இந்நிலையில், மதுரை அரசு தானியங்கி மானிய துணை இயக்குனர் அருள் ஆனந்த் தலைமையிலான குழுவினர் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடுவதற்கு தகுதியானதா என்பது குறித்த ஆய்வினை மேற்கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் பழுதடைந்த வாகனங்களின் எண்ணிக்கை, ஏலம் விடும் நாட்கள் போன்ற விபரங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி விரைவில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பழுதடைந்த வாகனங்களை ஏலம் விடப்படும் என்று தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Theni