ஹோம் /தேனி /

தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம் 

தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்

Theni District News | தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக இன்று காலை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும். எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவு தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியக்காரர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபர்கள் கூறுகையில், “அகில இந்திய மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை சம்பந்தமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ரயில்வே துறை அதிகாரிகள், மத்திய மாநில அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் என அனைத்து ஓய்வு பெற்ற ஊழியர்களையும் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க : “விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்” - தேனி நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும், மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்கிட வேண்டும், எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவு தொகையை வழங்கிட வேண்டும், ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வு ஊதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கிட வேண்டும் நிலுவைத் தொகையை பிடித்தும் இன்றி வழங்கிட வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

20 விழுக்காடு உயிர்த்தபட்ட ஓய்வூதியத்தை 65 முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 12000 ஆகவும் கடைசி ஊதியத்தில் 50 சதவீதம் விழுகாடாகவும் வழங்கிட வேண்டும் முதியோர்களுக்கான நிறுத்தப்பட்ட ரயில் பயண கட்டண சலுகை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni