Home /theni /

தேனி மாணவியின் விண்வெளி கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ள குடும்ப பொருளாதார நெருக்கடி

தேனி மாணவியின் விண்வெளி கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ள குடும்ப பொருளாதார நெருக்கடி

தேனி

தேனி மாணவி உதய கீர்த்திகா

Astronaut Trained Theni Girl Uthaya Keerthika : தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதய கீர்த்திகா என்னும் இளம்பெண் இந்தியாவுக்காக விண்வெளிக்கு செல்வதே இலக்காக வைத்து பல கட்ட பயிற்சிகளை முடித்துள்ளார் . அவர் விண்வெளிக்கு செல்ல பணப்பற்றாக்குறை உள்ளதால், பொருளாதார உதவி நாடி வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ஓவியர் தாமோதரன்- அமுதா தம்பதியின் மகள் உதய கீர்த்திகா. இவர் தனது தாய் தந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது ஏழ்மையான குடும்பம். போதுமான வருவாய் இல்லாமல்,   தந்தையின் சொற்ப வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்.  இக்கட்டான குடும்ப நிலையிலும் மகளின் கனவுக்காக தொடர்ந்து போராடி வரும் தாய் - தந்தையால் போலந்து நாட்டில் நடந்த விண்வெளி வீராங்கனை பயிற்சியை நிறைவு செய்துள்ளார் உதய கீர்த்திகா. இவர் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் சேர்வதே தனது இலக்கு என்றும் இந்தியாவுக்காக விண்வெளிக்கு செல்வது தனது கனவு என்றும் பெருமிதம் கொள்கிறார்.

விண்வெளி  பயிற்சி :-

பிளஸ்2 முடித்த பின் உக்ரைன்நாட்டில் உள்ள காக்யூ நேசனல் ஏர்போர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஏர் கிராப்ட் மெயிண்டனன்ஸ் இன்ஜினியரிங் என்கிற வின்வெளி பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.அதே பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு தேர்வில் 92.5 சதவீத மதிப்பெண் பெற்று முதல் தரத்தில் தேர்வாகியுள்ளார். அதற்கு பின்பு போலாந்து நாட்டிற்கு சென்று அனலாக் அஸ்ட்ரோனெட் ட்ரெய்னிங் செண்டரில் வின்வெளி வீரர்களுக்கானபத்து வகையான பயிற்சிகள் மேற்கொண்டார்.

காற்று மண்டலத்தில் மிதத்தல் , கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நீந்துதல் ,விண்வெளியில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ராக்கெட்டில் பயணம் செய்தல் உள்ளிட்ட 10 வகையானபயிற்சிகளை முடித்து விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் சேர்ந்து இந்தியாவிற்காக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தான் சாதனை செய்யப் போவதாக உறுதி கூறியுள்ளார் கீர்த்திகா.

தேனி மாணவி உதயகீர்த்திகா


ஏழ்மையிலும் சாதனை படைக்க துடிக்கும் இந்த மாணவி வின்வெளிக்கு செல்ல பயிற்சியில் 11வது பயிற்சியாக கனடாவில் உள்ள ஹால்ஸ் ஏர் அகாடமியில் விமானம் ஓட்டுதல் பயிற்சி  பெற வேண்டும். இதற்கு, போதுமான நிதி இல்லாததால்  செய்வதறியாது உள்ளனர். கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வரும் சூழலில் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறுகின்றனர், மாணவி உதய கீர்த்திகாவும் அவரது பெற்றோரும்.

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து விண்வெளிக்கு சென்ற நிலையில், இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு செல்வதற்கான பல்வேறு பயிற்சிகளை முடித்து தற்போது விமான பயிற்சிக்காக காத்திருக்கும் இவரின் கனவு நிறைவேறும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பெண்மணி என்ற வரலாற்று சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் மூலம் உதவி நாடிவரும் உதய கீர்த்திகாவிற்கு தமிழக அரசு முழு நிதி உதவி செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

சமூக ஆர்வலர்கள் உதவி :-

இதுகுறித்து உதயகீர்த்திகா கூறுகையில், " கனடாவில் உள்ள பைலட் பயிற்சி மையத்தில் சேர அனுமதி கிடைத்துள்ளது. அங்கு செல்ல ரூ 50 லட்சம் வரை தேவைப்படும். இவ்வளவு பணத்தை புரட்ட முடியாத நிலையில் உள்ளோம். விண்வெளியில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வது, விண்வெளியில் எவ்வாறு தரையிறங்குவது, எந்த இடத்தில் தரையிறங்குவது, எந்த இடத்தை தரையிறங்க தேர்வு செய்வது, விண்வெளியில் இருக்கும் சமயங்களில் உடல்நிலையை எவ்வாறு சீராக வைத்து கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் கனடாவிலுள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியை முடித்த பின்னர்  அடுத்த கட்ட பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயிற்சியில் சேருவதற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது, இந்த பயிற்சியை பெற பணம் இல்லாமல் தவித்து வருகிறோம், எனக்கு சில சமூக ஆர்வலர்கள் உதவ ஆரம்பித்தனர். சமூக ஆர்வலர்கள் கொடுத்த 4 லட்சம் பணத்தையும் கொரோனாவால் உணவின்றி தவிப்போருக்கு உதவியதால், தற்போது மத்திய மாநில அரசுகள் தனக்கு உதவினால் கல்பனா சாவ்லாவுக்கு அடுத்து விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்படுவேன். இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பெண்மணியாக இருக்க வாய்ப்புண்டு" எனவும் கூறியுள்ளார்.

விண்வெளி வீராங்கனையாக இந்தியாவிற்கு பெருமை சேர்க்க உள்ள உதய கீர்த்திகாவை தொடர்பு கொண்டு அவருக்கு உதவி செய்ய 96268 50509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி