தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை கம்பம் மெட்டு அடிவாரப் பகுதியில் கனிம வளங்களை எடுத்து ஆய்வு செய்யும் பணி இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜியாலஜிக்கல் சர்வே) இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பாகும் . இந்த ஆய்வு மையத்தின் மூலம் பூமிக்கு கீழ் உள்ள எஃகு, நிலக்கரி, உலோகம் மற்றும் கனிமங்கள், மினரல் குறித்த தகவல்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வு செய்து வழங்குகிறது.
மேலும் புவியியல் சிறப்பு வரைபடங்கள் மற்றும் மண்டல வரைபடங்கள் தயாரிப்பதும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது இதன் முக்கிய பணியாக உள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நுண்ணளவிலான நிலச்சரிவு அபாய பகுதிகளை கண்டறியும் திட்டத்தை சென்னையில் உள்ள தெற்கு மண்டல இந்திய புவியியல் ஆய்வு மையத்துடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த ஆய்வின்போது நிலத்தில் உள்ள கனிமங்கள் சேகரிக்கப்பட்டு இதனை டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் பெருங்கனிமங்களான பழுப்பு நிலக்கரி , சுண்ணாம்புக்கல், கிராபைட் வெர்டிகுலைட், தங்கம்,பிளாட்டடினம், வைரம் ,சிறு கனிமங்களான சாதாரண கற்கள், மண்,கிராவல், தீ களிமண், பல வண்ண கிரானைட், கருப்பு கிரானைட் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு புவியியல் மற்றும் சுங்கத்துறை’கு அறிக்கை சமர்பிக்கின்றனர்.
அதன்படி கம்பம்மெட்டு மலை அடிவாரப்பகுதியில் தனியார் நிலத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் போர்வெல் டிரில்லிங் இயந்திரம் மூலம் 150 அடி ஆளத்திற்கு நிலத்தை துளையிட்டு மணல் பாறைகள்,கிரானைட் கற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்விற்காக சென்னை ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இதையும் படிங்க : ராமநாதபுரம் கடலில் வலைவீசும் படலம் திருவிளையாடல் நிகழ்ச்சி!
தமிழ்நாட்டில் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகள் நிலத்தில் உள்ள கனிமவளங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்காக இந்த ஆய்வு கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . 150 அடி ஆழம் வரை துளையிட்டு கனிமங்கள் மற்றும் மினரல் சேகரிக்கப்பட்டு, இதனனை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆய்வகத்தில் தனி தனியாக பிரித்து பெருங்கனிமங்கள், சிறுகனிமங்கள் என கண்டறியப்படுவதாகவும் மேலும் நிலத்தடி நீர்,நிலநடுக்கம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni