தேனியில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 காலியிடங்களுக்காக தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட்
மாதத்தில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ள நபர்களுக்காக தேனி மாவட்டத்தில் இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரம் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி மையம்
அதில், “தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 காலியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்ட்
மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்
www.tnsurb. tn. Gov. In என்ற இணையதளம் மூலம் ஜூன் 1ம் தேதி (01.06.2023 முதல் 30.06.2023 ) வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தால் சிறந்த வல்லுனர்களை கொண்டு விரைவில் துவங்கப்பட உள்ளது.
இத்தேர்வுக்கான வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு பாடத்திற்கும் வல்லுனர்கள் வகுப்புகளை ஈடுக்கவுள்ளனர். இப்பயிற்சியின்போது இலவசப் பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.
எனவே தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணைய சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் இவ்வலுவலகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ள நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது 04546 254210 மற்றும் 6379268661 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்” என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni