ஹோம் /தேனி /

குழம்புகளை மட்டுமே விற்பனை செய்யும் கடை... தேனியில் குவியும் கூட்டம்..

குழம்புகளை மட்டுமே விற்பனை செய்யும் கடை... தேனியில் குவியும் கூட்டம்..

X
தேனி

தேனி

Theni District News : தேனி மாவட்டத்தில் குழம்பு வகைகளை மட்டும் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் சைவம், அசைவம் முறையில் தயாரிக்கப்பட்ட குழம்புகள் மட்டும் விற்பனை செய்யும் பிரத்தியேகமாக குழம்பு கடை இயங்கி வருகிறது. கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தா என்ற பெண்மணி குழம்புகள் மட்டும் தயாரித்து விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் .

விவசாயமே பிரதான தொழிலாக உள்ள தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தினசரி தோட்ட வேலைகளுக்கும் கூலி வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் அலுவலக வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி அலுவலக வேலை பார்த்து வரும் இளைஞர்கள் வீட்டிலேயே சமைத்து உணவு எடுத்துக் கொண்டாலும் பல நேரங்களில் உணவகங்களை நாடி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

உணவகங்களில் பல உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், வீட்டு சமையலில் ருசியான குழம்பு வகைகள் கிடைப்பதில்லை.

இதையும் படிங்க : தேனியில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை.. எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் வீட்டு சமையலில் குழம்புகள் தயாரித்து குழம்பு மட்டும் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தா.

கம்பம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வீட்டு சமையல் முறையில் சாம்பார் ரசம் கீரை, கூட்டு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, முட்டை குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா, முட்டை மசாலா உள்ளிட்ட பல குழம்புகள் மட்டும் விற்பனை செய்து வருகின்றனர். பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை குழம்புகள் மட்டும் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்

காலை 11 மணி முதல் மாலை வரை செயல்படும் இந்த கடையில் குழம்பு மட்டும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதுகுறித்து குழம்பு கடை உரிமையாளரான பிரீத்தா கூறுகையில், “சென்னை, கோயம்பத்தூர் போன்ற பெருநகரங்களில் குழம்பு மட்டும் விற்பனை செய்யும் கடை இருந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் குழம்பு மட்டும் விற்பனை செய்யும் கடை முதல் முதலாக கம்பத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கிசான் நிதி பெறுவோர் இதை உடனே பண்ணுங்க... தேனி விவசாயிகளுக்கு கடைசி சான்ஸ்..

தினசரி வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் தொடர்ந்து தோட்டங்களில் வேலை செய்தும் வீடுகளில் சமைக்கும் வேலையை செய்வதும் பெரும் சவாலாக இருக்கும் நிலை உள்ளது. தினசரி வேலைக்கு செல்லும் பெண்களும், இளைஞர்களும் அன்றாடம் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவது இல்லாத ஒன்றாக உள்ளது.

வீடுகளிலேயே சாப்பாடு மட்டும் தயார் செய்ய முடியும். ருசியான குழம்புகளை கடைகளில் வாங்கிக் கொள்ள முடியாத நிலையில் , குழம்பு மட்டும் விற்பனை செய்யும் கடை அமைப்பது தொடர்பான யோசனை எனக்கு தோன்றியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் அடிப்படையில் பெண்களை மட்டும் வைத்து வீட்டில் சமைப்பது போலவே மசால் அரைத்து விதவிதமான குழம்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். குறைந்த விலைக்கு குழம்பு கிடைப்பதால் மக்களின் ஆதரவு உள்ளது. இந்த தொழில் மூலம் மாதம் 10,000 முதல் 15 000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது” என்றார்.

First published:

Tags: Local News, Theni